மின் இணைப்பு பெறுவது அத்தியாவசியம். அதேபோல அதை சேமிப்பதும் மிக அவசியம். புதிய வீடு கட்டும்போது தண்ணீர் மோட்டார் இயக்குவதற்கும், இரவில் பூச்சு வேலை போன்றவற்றிற்கும் மின்விளக்கு தேவைப்படும். இதற்கு தற்காலிக மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். வீடுகளுக்கு மட்டுமின்றி கடைகளுக்கு, தொழிற்சாலைகளுக்கு, விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு பெறுவது எப்படி? எத்தனை நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும்? விவரங்கள் இங்கே.
விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பிரிவு அலுவலகங்களிலும் இதற்கான விண்ணப்பத்தைப் பெறலாம். http://tnerc.tn.nic.in/ என்கிற இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பெறலாம்.
விண்ணப்பத்தை எங்கே கொடுப்பது?
- பூர்த்தி செய்யப்பட்ட முழு வடிவிலான விண்ணப்பம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அந்தப் பகுதி பிரிவு அலுவலரிடம் (அல்லது பிரிவு அலுவலர் இல்லாதிருப்பாரானால் அதிகாரமளிக்கப்பட்ட நபரிடம் ) ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.
- விண்ணப்பங்கள் / மனுக்கள் முழுமையடையாமல் இருந்தாலும்கூட மற்றும் அவை நேரடியாகவோ அல்லது அஞ்சல் வாயிலாகவோ ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் கூட, பிரிவு அலுவலர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட நபர் எழுத்து வடிவில் ஒப்புகை அளித்தல் வேண்டும்.
- விண்ணப்பங்கள்/மனுக்கள் முறைப்படி இருக்குமானால், அவை உடனடியாக பதிவு செய்யப்பட்டு அவற்றிற்கு ஒப்புகை அளிக்கப்படுதல் வேண்டும். விண்ணப்பம் முழுமை அடையாதிருக்குமானால், குறைபாடுகளை எழுத்து மூலம் சுட்டிக்காட்டி விண்ணப்பத்தை, விண்ணப்பதாரரிடம் / மனுதாரரிடம் திருப்பியளித்தல் வேண்டும்.
- பதிவு செய்வதற்காகவும் மூப்புநிலையைக் கண்காணிப்பதற்காகவும் தனிப்பட்ட பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். பிரிவு அலுவலர் இல்லாதிருப்பாரானால், அதிகாரமளிக்கப்பட்ட நபர், மனுக்கள் / விண்ணப்பங்களைப் பெற்று, ஒப்புகை அளிப்பதற்காகவும், பதிவு செய்வதற்காகவும் அலுவலக நேரங்களில் கட்டாயமாக இருத்தல் வேண்டும்.
மின் இணைப்பு பெறுவதற்கான தகுதிகள்:
- வீட்டின் சொந்தக்காரராக இருக்க வேண்டும் அல்லது நிலத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும்.
- வீடு அல்லது நிலத்தின் உரிமையாளரிடமிருந்து அனுமதிக் கடிதம் வாங்கியிருக்க வேண்டும்.
மின் இணைப்பு பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்:
- வீடு, நிலம், தொழிற்சாலை போன்றவற்றின் பட்டா மற்றும் பத்திரத்தின் நகல்.
- வீடு மற்றும் தொழிற்சாலைகளின் கட்டிட அமைப்பின் நிழற்பட அச்சுமுறை நகல் (ப்ளூ பிரிண்ட்).
- ஒயரிங் முழுவதுவமாக செய்யப்பட்டுவிட்டது என்பதற்கான அரசு அனுமதி பெற்ற எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரின் கடிதம் (அரசு அனுமதி பெற்ற மின்பொறியாளர்தான் ஒயரிங் செய்ய வேண்டும். அவர்தான் இந்தக் கடிதத்தையும் கொடுக்க வேண்டும்).
கட்டணம்
- விண்ணப்பத்துடன் 50 ரூபாய் செயல்படுத்துவதற்கான தொகையாக டிமாண்ட் டிராஃப்ட் எடுத்துக் கொடுக்க வேண்டும்.
- தனி இணைப்பா, மும்முனை இணைப்பா என்பதைப் பொறுத்தும், போஸ்ட் அருகில் உள்ளதா? பில்லர் தேவைப்படுமா? டிரான்ஸ்ஃபார்மரில் லோடு போதுமானதாக இருக்கிறதா? கேபிள் இணைக்க வேண்டுமா என்பதையெல்லாம் ஆய்வு செய்து ஒரு தொகை மதிப்பீடு செய்து கூறப்படும். அந்தத் தொகையை மின் இணைப்பு பெறுவோர் செலுத்த வேண்டும்.
- சில சமயங்களில் டிரான்ஸ்ஃபார்ம், கேபிள், பில்லர், போஸ்ட் போன்றவற்றிற்கான செலவை மின் இணைப்பு பெறுவோரே கொடுக்க வேண்டியிருக்கலாம்.
எத்தனை நாளில் பெற முடியும்?
- அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு வாரத்தில் இருந்து 30 நாட்களுக்குள் மின் இணைப்பு கிடைத்துவிடும்.
- டிரான்ஸ்ஃபார்ம் போட வேண்டுமென்றால் 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை ஆகலாம்.
மின் இணைப்பின் பெயர் மாற்றம்:
ஒரு வீட்டை வேறொருவர் வாங்கும் பட்சத்தில்
அதன் மின் இணைப்பையும் தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு
பட்டா, பத்திரம் மற்றும் உங்கள் பெயருக்கு ஒப்பந்தம் செய்த பதிவுகள்
அனைத்தையும் கொடுத்து இணைப்பை உங்கள் பெயரில் மாற்றிக் கொள்ளலாம். இதை 90
நாட்களுக்குள் செய்துகொள்ள வேண்டும்.
மற்ற செயல்பாடுகள்:
மின் நுகர்வோர், மின் வழங்குவதற்கான
விண்ணப்பம் நீங்கலாக, பிரிவு அலுவலகத்தில் பின்வரும் சேவைகள் தொடர்பான
விண்ணப்பங்கள்/ மனுக்களையும் கூட தாக்கல் செய்யலாம்.
மின் இணைப்பை இடமாற்றம் செய்தல், தற்காலிக மின் வழங்கல், மின் இணைப்பின் பெயர் மாற்றம், மின்கட்டண மாற்றம், பட்டியலிடலிலுள்ள முறையீடுகள், மின் அளவியை மாற்றிவைத்தல், மின் வழங்கல் தடை, மின் அழுத்தம் தொடர்பான முறையீடுகள், வைப்பீடுகளைத் திரும்பப் பெறுதல் போன்றவற்றிற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பிரிவு அலுவலகத்தை அணுகலாம்.
மேலதிக தகவல் தொடர்புக்கு
மின்குறை தீர்ப்பாளர்,
எண்.19A, ருக்மினி லட்சுமிபதி சாலை,
எழும்பூர், சென்னை - 600 008
தொலைபேசி எண். 044-28411376
மின்னஞ்சல் – tnercnic.in
மின் நுகர்வோர் கவனத்திற்கு
மின்சார வாரியம் தன்னுடைய கடமையைச் செய்ய
தாமதமானால் நுகர்வோருக்கு இழப்பீடு தருகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள்
நுகர்வோரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாவிடில் உதாரணத்திற்கு மீட்டர்
எரிந்து விட்டது என்று புகார் கொடுத்து 30 நாட்களுக்குள் சரி செய்துகொடுக்க
வேண்டும். 30 நாட்களைக் கடந்துவிட்டால் ஒரு நாளைக்கு 100 ரூபாய் முதல்
அதிகபட்சம் 2,000 ரூபாய் வரை இழப்பீடு கொடுக்க வேண்டும். அறிவிக்கப்படாத
மின்வெட்டு இருக்கும் பட்சத்தில் 155333 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு
புகாரைப் பதிவு செய்து புகார் எண் வாங்கிக் கொள்ள வேண்டும்.
மாநகராட்சியெனில் ஒரு மணி நேரத்தில் சரிசெய்யப்பட வேண்டும். இல்லையெனில்
ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 50 ரூபாய் முதல் அதிகபட்சம் 2,000 ரூபாய் வரை
இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். இழப்பீடு குறித்த மேலும் விவரங்கள்
அறியவும், இழுத்தடிக்கப் படாமல் மின் இணைப்பு பெறவும் வழிகாட்டுகிறது
இந்தியன் குரல். தொடர்புக்கு - 94443 05581
ARUMAIYANA THAGAVAL NANRI
ReplyDeleteஉபயோகமான தகவல் நன்றி
ReplyDeleteபொரம்பொக்கு நிலத்தில் வாழும் நாங்கள் எவ்வாறு மின் இணைப்பது
ReplyDeleteஅருமை
ReplyDeleteநல்ல செய்தி
ReplyDeleteநான் ஆன்லைன் மூலம் புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பம் அனுப்பினேன் பட்டா அப்பா பெயரில் உள்ளது அப்பா இறந்து விட்டார் அப்பா இறப்பதற்கு முன்பு எனக்கு பட்டா வில் உள்ள இடத்தில் மூன்றில் ஒரு பங்கு எனக்கு செட்டில்மென்ட் பத்திரமாக எழுதி கொடுத்து விட்டார் 10 வருடமாக வீட்டு வரி காட்டியுள்ளேன் எல்லா ஆதாரங்கள் இருந்தும் வாரிசு சான்றிதழ் கேட்கிறார்
ReplyDeleteசார் வணக்கம் 1பேஸ் பவர் உள்ளது.
ReplyDeleteஎனக்கு 3பேஸ் பவர் வேண்டும் என்ன செய்ய வேண்டும் தேவை சுரேஷ் குமார்