Thursday, 23 January 2014

வாடகை வீட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?

இன்றைக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதே  பிரச்சினையாக இருப்பது ஒருபுறம். அப்படியே கிடைத்தாலும் சொல்லும் கண்டிஷனுக்கெல்லாம் ஆமாம் போட்டுவிட்டு குடியேறினால் அடுத்த வருடமே வாடகையை உயர்த்துவது, மின்சாரக் கட்டணம் அதிகமாகக் கேட்பது எனப் பல பிரச்சினைகளை அடுத்தடுத்து சந்திக்க வேண்டியிருக்கிறது. இது தவிர வாடகைக்குக் குடிவருபவர்களும் சில பிரச்சினைகளை ஏற்படுத்துவதுண்டு. எனவே வாடகை வீட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி எனத் தெரிந்துகொள்வோம்.

முன்பணம்
வீட்டுக்கான முன்பணம் பெற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்தே பெறப்படுகிறது. சென்னை போன்ற நகரங்களில் மாத வாடகையைப்போல் பத்து மடங்கும் மற்ற நகரங்களில் சுமார் ஐந்து மடங்கும் முன்பணம் வாங்குகிறார்கள். அவரவர் சாமர்த்தியத்திற்கேற்றாற்போல் பேரம் பேசி குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

ஒப்பந்தம்
  • முதலில் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் அக்ரிமெண்ட் / ஒப்பந்தம் எழுதிக் கொள்வது அவசியம். 20 ரூபாய் முத்திரைத்தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வளவு எனத் தெளிவாக ஒப்பந்தம் எழுதிக் கொள்வது மிக அவசியம்.
  • ஒப்பந்தத்தில் முன்பணம், மாத வாடகை, மின் கட்டணம், தண்ணீர்க் கட்டணம், பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால், அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும்.
ரசீது
வாடகைக்குப் குடியிருப்பவர் முன்பணம் தொடங்கி, அனைத்துக்கும் உரிமையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்கென அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை. சாதாரண வெள்ளைத் தாளில் எழுதி வாங்கிக் கொண்டாலே போதுமானது. தேவைப்பட்டால், ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.

வாடகை அதிகமாக வசூலித்தால்:
  • தாம் கொடுக்கும் வாடகை அதிகம் என்று குடியிருப்பவர் நினைத்தால், சிறு வழக்கு நீதிமன்றத்தில் மனு போடலாம். அதன் பின்னர், குடியிருப்பவர் ஒரு என்ஜினீயரையும் வீட்டு உரிமையாளர் ஒரு என்ஜினீயரையும் வைத்து, வீட்டின் மதிப்பைக் கணக்கிட்டு அவரவர்களுக்குச் சாதகமாக சமர்ப்பிப்பார்கள். எது சரி? எது தவறு என்பதை இரண்டு என்ஜினீயர்களும் கொடுத்த விவரங்களிலிருந்து சரி பார்த்து தீர்ப்பு வழங்குவார்கள்.
  • வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிறபோது சென்னைவாசிகள் என்றால், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்திலுள்ளவர்கள், முன்ஷிப் நீதிமன்றங்களை அணுகலாம்.
வீட்டைக் காலிசெய்ய வைக்க:
  • தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/2-யின்படி குடியிருப்பவர் வாடகை கொடுக்காமல் இருப்பது, உள் வாடகை அல்லது மேல் வாடகைக்கு விடுவது, வீட்டு உரிமையாளரை நீ ஓனரே இல்லை எனச் சொல்வது, மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டைப் பூட்டியே வைத்திருப்பது, வீட்டை சேதப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக குடியிருப்பவரை காலி செய்யச் சொல்ல முடியும்.
  • தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/3 –யின்படி வீட்டு உரிமையாளரின் வாரிசுகளுக்கு வீடு தேவை என்றாலோ, தன் சொந்தத் தேவைக்கு வேண்டுமென்றாலோ குடியிருப்பவரைக் காலி செய்யச் சொல்லலாம்.
  • தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு  14 பி-யின்படி வீட்டை இடித்துக் கட்டவேண்டும் என்றால், அவரைக் காலி செய்யச் சொல்லலாம்.
குடியிருப்போருக்கும், வீட்டு உரிமையாளருக்கும் பிரச்சினை எனில்:
  • வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனக்காரருக்கும் இடையே ஏதாவது பிரச்சினை வந்து, பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விடுவதும் உண்டு. அதுபோன்ற நேரங்களில், வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை போட்டு வரலாம்.
  • வங்கிக் கணக்கு பற்றிய விவரம் கிடைக்கவில்லை எனில், மணியார்டர் செய்யலாம். அதையும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினால், சிறு வழக்கு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்து வந்தால், குடித்தனக்காரர் மீது வீட்டின் உரிமையாளர் குற்றம் எதுவும் சொல்ல முடியாது.
வீட்டு உரிமையாளர்களின் கவனத்திற்கு:
  • குடியிருப்பவர் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றால், குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முன்னறிவிப்பு தரவேண்டும். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமெண்ட்டில் எழுதிக் கொள்வது நல்லது. சொந்தக் காரணம், மகன்/மகளுக்கு வீடு தேவை என்பது போன்றவற்றுக்காக வீட்டை காலி செய்யச் சொல்லலாம்.
  • அதே நேரத்தில், வீட்டின் உரிமையாளருக்கு அந்தப் பகுதியில் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்சத்தில் வாடகைக்கு இருப்பவரைக் காலி செய்ய வைக்க உரிமை இல்லை. வீட்டை இடித்துக் கட்டுவது என்றால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி வாங்கியதற்கான ஆதாரத்துடன்தான் வீட்டைக் காலி செய்யச் சொல்ல முடியும். வீட்டைக் காலி செய்த பிறகு இடிக்கவில்லை என்றால், ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அதில் குடியமர்த்த வேண்டும்.
  • வீட்டை இடித்துக் கட்டிய பிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டைக் கேட்டால், அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் ஒருவேளை தவறான தகவல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடியிருப்பவர் அதற்கான நஷ்டஈடு கோரலாம்.
  • இதேபோல், வாடகைக்கு இருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல்லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். வாடகை சரியாக தரவில்லை என்பதற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளையை நிறுத்துவது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெற முடியும்.
மின் கட்டணப் பிரச்சினைக்கு:
வாடகை வீட்டில் குடியிருப்போரிடம் அதிக மின் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதமானது. ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகளால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரே மின் இணைப்பில், பல வீடுகள் வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள், ஒரே இணைப்புக்கு கூடுதல் மின் மீட்டர் இணைப்புகளை கூடுதல் வைப்புத்தொகை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஆனால், பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்த முன்வருவதில்லை.

இந்திய மின்சாரச் சட்டம் 2003-யின்படி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள கட்டணத்தைத்தான், மின் பகிர்மான நிறுவனங்கள் வசூலிக்கின்றன. ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்போரிடம் மீட்டருக்கு மேல் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது மீட்டரில் பதிவான யூனிட்டுகளை கணக்கிட்டு, ஒரு யூனிட்டுக்கு சூ7 முதல் சூ9 வரை வீட்டு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர்.

வீடு வாடகைக்கு எடுக்கும் போதே மின் கட்டணம், குடிநீர்க் கட்டணம் குறித்து வீட்டு உரிமையாளர்களிடம் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் செய்ய வேண்டும். மின்சாரச் சட்டப்படி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு 3 மாதச் சிறைத் தண்டனை கிடைக்க சட்டத்தில் வழிகள் உள்ளன.

வாடகை வீடு சட்டம்:
தமிழகக் கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு) சட்டப்படி ஒரு வீட்டின் வாடகை என்பது அந்த வீட்டின் ஒட்டு மொத்த மதிப்பை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு வீட்டின் மதிப்பென்பது நில மதிப்பு மற்றும் கட்டிட மதிப்பைக் கணக்கிட்டு வருவதாகும். இப்படி கணக்கிட்டுக் குடியிருப்புக்கு  9 சதவிகிதமும், குடோன், கடை போன்ற கமர்ஷியலுக்கு 12 சதவிகிதமும் வாடகை நிர்ணயிக்க வேண்டும் (அதாவது ஒரு வீட்டின் மதிப்பு 10 லட்சம் என்றால் 9 சதவிகிதம் வைத்துக் கணக்கிட வேண்டும். வருடத்திற்கு 90,000 ரூபாய் வரும். 12 மாதங்களுக்குப் பிரித்தால், மாதத்திற்கு 7,500 ரூபாய் வரும்).

அடுத்து, கட்டிட மதிப்பு என்பது அதன் தளங்களைப் பொறுத்தது. மூன்று தளங்கள் இருக்கிறதெனில், முதல் தளத்திற்கு மொத்த நிலத்தின் மதிப்பையும் அந்தத் தளத்திற்கான கட்டிட மதிப்பையும் கணக்கிட வேண்டும். இரண்டாம் தளமென்றால், நிலத்தின் மதிப்பில் பாதியையும் மூன்றாவது தளமென்றால், நிலத்தின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கையும் கணக்கிட வேண்டும்.


இத்துடன் ஒரு வீட்டின் கூடுதல் வசதிகளைப் பொறுத்து (கார் பார்க்கிங், லிஃப்ட், ஏசி, வாட்டர் ஹீட்டர், ஃப்ர்னிச்சர், எலிவேஷன், ஓவர் டேங்க் போன்றவை) கணக்கிட்டுக் கொள்ளலாம். கரண்ட் உள்ளிட்ட வசதிகளைப் பொறுத்து, மொத்த மதிப்பில் 7.5 சதவிகிதம்வரை வருடத்திற்கு நிர்ணயிக்கலாம்.

நாட்டின் கடல் எல்லையை எப்படி கணக்கிடுகிறார்கள்?

மண்ணில் வேலி போடலாம், வானில் வேலி போடமுடியுமா என ராமகிருஷ்ணரை மேற்கோள் காட்டி பாரதியார் கேள்வி போடறார். இந்தக் கேள்வி ஐ.நா. சபைக்குக் கேட்டிருச்சோ என்னவோ, 1982-இல் ஒரு கூட்டம் போட்டாங்க. United Nations Convention on the Law of the Sea என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புதான், உலக நாடுகளின் கடல் எல்லைகளை வரையறுத்தது..

கடலில், மூன்று வகையான எல்லைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன.

கரையில் இருந்து ஆறு கடல் மைல். இதை நாட்டிகல் மைல் (‡Nautical mile)  என்றும் சொல்வார்கள். ஒரு நாட்டிகல் மைல் என்பது 1.85 கி.மீ.  தொலைவுக்கு உட்பட்டது ‘கரைக்கடல்.’ அதாவது ஒரு நாட்டின் ஆளுகைக்குட்பட்ட கடல் பகுதி (territorial waters). இதில் அந்த நாட்டைச் சேர்ந்த கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அடுத்த ஆறு நாட்டிகல் மைல், ‘அண்மைக் கடல்’ (contiguous) என்று அழைக்கப்படுகிறது. இதுவும் கரைக்கடல் மீது உரிமை உள்ள நாட்டின் ஆளுகைக்குட்பட்டதுதான். அந்த நாடு அண்மைக் கடற்பரப்பில் செல்லும் படகுகள்,  சிறுகப்பல்களிடமிருந்து சுங்க வரி, வேறு பல கட்டணங்களை வசூலிக்கவும், குடியமர்தல், சுகாதாரம் தொடர்பான சட்டங்கள் இவை தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் சட்ட, விதிமுறை மீறல்களைத் தடுக்கவும் அதிகாரம் பெற்றது. இதில் அந்த நாட்டின்  விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அதன்பின் 200 கடல் மைல் தொலைவிற்கு உள்ளது தனிப் பொருளாதாரக் கடல் பகுதி (Exclusive Economic ). இந்தப் பகுதியில் இதன் தரைப்பரப்பில் உள்ள கனிமங்கள், பெட்ரோலிய வளம் ஆகியவை அதற்கு அண்மையில் கரையைக் கொண்டுள்ள நாட்டிற்கு உரியது. இதற்கு அப்பால் உள்ளது உலகினர் அனைவருக்கும் உரிமை உள்ள ஆழி.

சுருக்கமாகச்  சொன்னால் ஒரு நாட்டின் கடற்கரையிலிருந்து  12 கடல் மைல் (சுமார் 22.2 கி.மீ.) தொலைவிற்குள் உள்ள கடல் பகுதியில்    பயணிகள் கப்பல் போகலாம். ஆனால், மீன்பிடிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள், வணிகக் கப்பல்கள்  செல்வதற்கு, அந்த நாட்டின் கடலோரக் காவல்படையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

மீன்பிடிப் படகுகளில், மரக்கலங்களில், கப்பல்களில் அந்தந்த நாட்டின் தேசியக் கொடிகள் பறக்க வேண்டும். இவையெல்லாம் ஐ.நா. அமைப்பு வகுத்தளித்திருக்கும் சட்டங்கள். இதனை ஏற்று இந்த ஒப்பந்தத்தில் இதுவரையிலும் இந்தியா, இலங்கை உட்பட 158 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன.

18-ஆம் நூற்றாண்டில் இருந்து 20-ஆம் நூற்றாண்டு வரையிலும் ஒரு நாட்டின் கடல் எல்லை, ஆறு கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருந்தது.  ஏனெனில், அப்போது இருந்த பீரங்கிகள் வீசுகின்ற குண்டுகள், ஆறு கிலோ மீட்டருக்கு மேல் பாயாது.

இப்போது கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகள் வந்து விட்டன. என்றாலும், சிங்கப்பூர், ஜோர்டான் போன்ற நாடுகள், தங்களுடைய கடல் எல்லையை, 6 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலேயே நிறுத்திக் கொண்டு உள்ளன.

சரி, இரு நாடுகளுக்கு இடையே உள்ள கடலின் அளவு 12+12 கடல் மைலுக்கும் (அதாவது 44 கி.மீ.க்கும். குறைவாக இருந்தால் என்ன செய்வது?

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கடல்பரப்பின் அகலம் 25 கிலோ மீட்டர்கள்தாம். இத்தகைய சூழலில், இரண்டு நாடுகளும் பேசி, கடல் எல்லையைச் சரிபாதியாக வகுத்து, ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்தியா, இலங்கையிடையே அத்தகைய ஒப்பந்தங்களும் உள்ளன.

ஆனாலும் பிரச்சினையும்  இருந்து வருகிறது. உண்மையில் பிரச்சினை எல்லை இல்லை. மீன்கள்தான். இப்போது கரை ஓரங்களில் மீன் வளம் குறைந்து விட்டது. எனவேதான், மீனவர்கள், அண்மைக் கடலையும் தாண்டிச் செல்லுகிறார்கள் எனச்  சொல்லப்படுகிறது.

அரசியல்வாதிகள் தீர்க்க முடியாத பிரச்சினையை அறிவியல் தீர்த்துவிடும். அட, என் காலரை ஏன் பார்க்கறீங்க. நான் அதைத் தூக்கிவிட்டுக்கிட்டு அலையறேனா என்ன?

சின்னப் பிள்ளைங்க இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிச்சிருக்காங்க. அறிவியலின் துணையோடுதான். மயிலம் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல், தகவல் தொடர்பியல் மாணவிகள் அஸ்வினி, தீபீகா, திவ்ய தேவி, மணிமொழி, அமுதா ஆகிய  மாணவிகள் ஒரு கருவியை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டினால் அந்தக் கருவி எச்சரிக்கை செய்வதோடு, படகின் என்ஜினையும் ஆஃப் செதுவிடும். படகு மேலே நகரமுடியாமல் நின்று விடும்.

இந்தக் கருவி எப்படி வேலை செய்கிறது?   செயற்கைக்கோளின் உதவியோடு, கணினி மூலம் பூமியில் ஒருவரின் நடமாட்டங்களை வழி நடத்த முடியும். இதற்கு குளோபல் பொசிஷனிங்  சிஸ்டம் (GPS) என்று பெயர். இந்த GPS கருவியோடு,  சர்வதேசக் கடல் எல்லைகள் பற்றிய கம்ப்யூட்டர் சிப் ஆகியவை கொண்டது மாணவிகளின் கருவி. கடலில் எல்லையை நெருங்குவதற்கு 10 மீட்டர் இருக்கும்போது முன் பதிவு செய்யப்பட்ட குரல் ஒன்று படகில் இருப்பவர்களை எச்சரிக்கை செய்யும். அதையும் தாண்டிப் போவார்களானால், சென்சர் மூலம் என்ஜினை நிறுத்திவிடும் (காண்க: ‘புதிய தலைமுறை கல்வி’ 12 ஆகஸ்ட் 2013 இதழ்).


கடலுக்குப் போகிறவர்கள் கவர்மெண்ட்டை நம்புவதற்குப் பதில் இந்தக் கருவியை நம்பலாம்.

பெயர் மாற்றம் செய்வது எப்படி?


தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் இங்கே

வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன, தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:
தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate  அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க     வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ்     இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று     சமர்ப்பிக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.

பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச்     சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.

தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.

மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.

கட்டணம்,
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004  முதல் ரூ.415 மட்டும்.

தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ.65.

செலுத்தும் முறை:
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.

அஞ்சல் மூலம் செலுத்த: உதவி இயக்குநர்    (வெளியீடுகள்), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-600 002 என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.

பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.

பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.

பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள்  சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக்     கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.

பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.

பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.

இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எப்படி பெறுவது?
அரசிதழை  நேரில் பெற  விருப்பம்  தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.

தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம்  அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor)     இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்

http://www.stationeryprinting.tn.gov.in/servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள்  தெரிந்துகொள்ளலாம்.

http://www.stationeryprinting.tn.gov.in/forms.htm விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.



தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:

சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.


சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும். இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

மண்ணுக்கு மரம் லாபமே!

விவசாயிகளுக்கு மாற்று வருமானம் தரும் மரம் வளர்ப்பு மற்றும் அதற்குரிய காப்பீட்டுக்கான வழிகாட்டல்கள்

பாசனத்திற்குப் போதுமான அளவு நீர் இருப்பதில்லை. தேவையான நேரத்திற்கு வேலைக்கு ஆட்கள் வருவதில்லை. பருவநிலை மாற்றத்தால் பார்த்துப் பார்த்து பயிர் செய்த பயிர்களும் சமயத்தில் எதிர்பார்த்த மகசூல் தருவதில்லை. இப்படிப்பட்ட சூழலில் இனி வரும் காலங்களில் நிரந்தர வருமானத்திற்கு ஓரளவாவது வழி செய்துகொண்டால்தான் விவசாயிகள் பொருளாதாரச் சிக்கலிலிருந்து தப்பிக்க முடியும். அதற்கு இருக்கும் ஒரே வழி மரம் வளர்ப்பது.

மரங்களை எப்படி வளர்ப்பது, அதற்கான தொழில்நுட்பங்கள் என்ன, எப்படி அறுவடை செய்வது, யாரிடம் விற்பனை செய்வது போன்ற விவரங்களை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உருவாக்கிய தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகளுக்கான மதிப்புக் கூட்டு சங்கிலித் திட்டத்தின் மூலமும் பெறலாம். இத்திட்டம் உலக வங்கியின் நிதியுதவியுடன், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (ICAR) செயல்படுத்திவரும் தேசிய வேளாண்மை புதுமைத் திட்டத்தின்கீழ் (NAIP) இயங்கி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் உயர்ரக மரக்கன்றுகளை குளோனல் முறையில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது வனக்கல்லூரி. தமிழ்நாடு காகித ஆலை, சேஷசாயி காகித ஆலை, வாசன் தீக்குச்சித் தொழிற்சாலை, ஆரோமிரா உயிரி எரிசக்தி நிறுவனம் மற்றும் அம்பி பிளைவுட் போன்ற மரம் சார்ந்த தொழிற்சாலைகளுடன் ஒப்பந்த முறை சாகுபடித் திட்டத்திலும் விவசாயிகளை இணைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தரமான மர நாற்றுகள், சிறந்த மர வளர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் சந்தை நிலவரம் போன்றவை சரியான நேரத்தில் கிடைக்கின்றன. மேலும் விவசாயிகள் தங்கள் மரங்களுக்கேற்ற சரியான விலையை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக தொழிற்சாலைகளிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர்.

தானே புயல் போன்ற இயற்கைச் சீற்றம் அல்லது கடும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மரக்காப்பீடு (Tree Insurance) திட்டத்தையும் இந்தியாவிலேயே முதல் முறையாக வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த மரக்காப்பீடானது இயற்கைச் சீற்றங்கள், சமுதாயக் காரணங்கள், வனவிலங்குகள், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் போன்ற இடர்பாடுகளால் (Risk coverage) மரங்கள் பாதிக்கப்படும்போது ஏற்படும் நஷ்டத்திற்கு விவசாயிகள் அதுவரை செலவு செய்த ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பீட்டுத் தொகையாக வழங்குகிறது.

இந்த மரக்காப்பீட்டுத் திட்டம் உருவாகக் காரணமாக இருந்த பேராசிரியர் முனைவர் கா.த.பார்த்திபன், வனக்கல்லூரி இழப்பீட்டுத் தொகையை முதல் வருடத்திலிருந்தே கொடுப்பதற்கும், பிரிமியம் தொகையை ஒரே நேரத்தில் செலுத்துவதற்கும், ஒரு விவசாயினுடைய காப்பீடு செய்யப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியில் உள்ள மரங்கள் பாதிக்கப் பட்டாலும் அதற்கான நஷ்ட ஈட்டை வழங்குவதற்கும், மரத்திற்கு மட்டுமல்லாது அதை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆயுள் காப்பீடு வழங்குவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.

இத்திட்டத்தில் இதுவரை காகித ஆலைகள், பிளைவுட் ஆலைகள், தீக்குச்சித் தொழிற்சாலைகள், உயிரி எரிசக்தி நிறுவனங்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மூலப் பொருட்கள் தரும் மரங்களான சவுக்கு, தைல மரம், மலைவேம்பு, பெரு மரம், குமிழ் மரம், சவுண்டல் மற்றும் சிசு மரம் போன்ற ஏழு வகையான மரங்களை இணைத்துள்ளதாகவும் இன்னும் பல மரங்களையும் இணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் என்.கே.புத்தன், மேலும் சில கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:

பயிர்க் காப்பீட்டுக்கும் மரக்காப்பீட்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் வங்கிக் கடன் பெற்ற மற்றும் பெறாத விவசாயிகளின் தானியப்பயிர் மற்றும் தென்னை மரங்களுக்கு வழங்கப்படுகிறது. இயற்கை இடர்பாடுகளால் இவற்றின் உற்பத்தி குறையும்போது ஏற்படும் நஷ்டத்தை பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஈடுசெய்கிறது. ஆனால் மரக்காப்பீடானது எதிர்பாராத விபத்துகளினாலும், வனவிலங்குகள் மற்றும் எதிரிகளின் செயல்களாலும் மரங்கள் சேதமடைந்தால், அதுவரை அந்த மரங்களை வளர்ப்பதற்கு ஏற்பட்ட உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு நஷ்ட ஈடாக வழங்குகிறது.

இத்திட்டத்தின் பயன்கள் என்னென்ன?
இத்திட்டம் விவசாயிகளின் முதலீட்டைப் பாதுகாப்பதுடன் வங்கிகளிலிருந்து கடன் பெறவும் உதவுகிறது. வங்கிகள் இன்சூரன்ஸ் பாலிசியை பிணையமாகக் கருதி விவசாயிகளுக்கு கடன் தர முன் வருவதால் பல விவசாயிகள் பயன் பெறுவார்கள். இன்சூரன்ஸ் பாதுகாப்பு உள்ளதால் விவசாயிகள் எந்த அச்சமும் இன்றி மரம் வளர்ப்பில் ஈடுபடலாம்.  

மரக்காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் யார் யார்?
தன் சொந்த நிலத்திலோ அல்லது குத்தகை நிலத்திலோ பயிரிடப்படும் மரங்களுக்கு விவசாயிகள் பாலிசி எடுக்கலாம். இது தவிர ஒப்பந்த முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளின் மரங்களுக்கு, எந்த மரம் சார்ந்த தொழிற்சாலையுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்களோ அந்தத் தொழிற்சாலையே மொத்தமாக அனைத்து ஒப்பந்த விவசாயிகளின் மரங்களுக்கும் பாலிசி (group policy) எடுத்துவிடும்.

எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன சான்றிதழ்கள் இணைக்க வேண்டும்?
மரக்காப்பீடு செய்ய அதற்கான கோரிக்கைப் படிவத்தை (proposal form) பூர்த்தி செய்து அருகிலுள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகத்தில் கொடுத்து பிரிமியம் செலுத்தி பாலிசியை பெற்றுக்கொள்ளலாம். வேறு எந்த ஆவணமும் தேவையில்லை. சிட்டா அடங்கல் போன்ற ஆவணங்கள் இடர்பாடுகளால் மரங்கள் பாதிக்கப்படும்போது மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

எவ்வளவு பரப்பளவில் உள்ள மரங்களைக் காப்பீடு செய்யலாம்?
ஒரு விவசாயி குறைந்தபட்சமாக ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள மரங்களை காப்பீடு செய்யலாம். அதிகபட்ச நில வரம்பு கிடையாது.

எந்தெந்த இடர்பாடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது?
எதிர்பாராத தீ, காட்டுத் தீ, புதர்த் தீ, இடி, மின்னல், எதிரிகளின் தாக்குதல், கலவரம், புயல், சூறைக்காற்று, அதிக வெள்ளம், தண்ணீரில் மூழ்குதல், வாகனங்கள் மோதுவதால் ஏற்படும் சேதம் மற்றும் வனவிலங்குகளினால் ஏற்படும் சேதம் ஆகியவற்றிற்கு நஷ்டஈடு வழங்கப்படுகிறது. இது தவிர குறிப்பிட்ட நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்குதலால் மரங்கள் சேதமடையும் என்று கருதினால் கூடுதால் பிரிமியம் செலுத்தி பாதுகாப்பு பெறலாம்.

ஒரு ஏக்கர் மரத்திற்கு, காப்பீடு செய்யப்படும் தொகை (sum insured) எப்படி கணக்கிடப்படுகிறது?
ஒரு குறிப்பிட்ட மரப்பயிரை ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட ஆகும் முக்கிய செலவுகளான நிலம் உழுதல், நாற்றுக்களின் மொத்த மதிப்பு, நீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், உரம் மற்றும் மருந்துச் செலவுகள், மற்ற பிற அத்தியாவசிய செலவுகள் போன்றவற்றின் கூட்டுத்தொகையே ஒரு ஏக்கர் மரத்திற்கு காப்பீடு செய்யப்படும் தொகையாகும். உதாரணமாக ஒரு ஏக்கர் சவுக்கு பயிரிட முதல் வருடம் 20,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருந்தால் அந்தத் தொகையே காப்பீடு செய்யப்படும் தொகையாகும். இரண்டாம் ஆண்டு கூடுதலாக  10,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருந்தால் இரண்டாம் ஆண்டிற்கான காப்பீடு செய்யப்படும் தொகை 30,000 ரூபாய் ஆகும்.

எவ்வளவு பிரிமியம் செலுத்த வேண்டும்?
ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்படும் மரங்களுக்கு அதற்கு ஆகும் மொத்தச் செலவுகளைக் கணக்கிட்டு அந்தச் செலவுத் தொகைக்கு 1.25 சதவிகிதம் பிரிமியமாக செலுத்த வேண்டும். நோய் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டுமானால் மொத்தமாக 1.60 சதவிகிதம் பிரிமியம் செலுத்த வேண்டும்.

மரக்காப்பீட்டிற்கு செலுத்தும் பிரிமியத்திற்கு மானியம் ஏதாவது உள்ளதா?
தற்போது மானியம் எதுவும் இல்லை.

மரத்திற்கு இழப்பீடு நடந்ததை காப்பீடு நிறுவனத்திற்கு தெரிவிப்பதற்கு கால வரம்பு உள்ளதா?
விபத்து நடந்து மரங்கள் பாதிக்கப்பட்டால் அருகிலுள்ள எங்கள் அலுவலகத்திற்கு 24 மணி நேரத்திற்குள் எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும். உடனடியாக மதிப்பீட்டாளரை அனுப்பி நஷ்டஈடு கணக்கிடப்படும்.  

எப்படி நஷ்டஈடு கணக்கிடப்படுகிறது? எப்போது நஷ்டஈடு கிடைக்கும்?
விபத்து பற்றி தகவல் பெற்றவுடன் மதிப்பீட்டாளரை அனுப்பி, கள ஆய்வு (survey) செய்யப்படும். அன்றைய தேதி வரை பாதிக்கப்பட்ட மரங்களை வளர்க்க, விவசாயி செய்த மொத்தச் செலவே அதிகபட்ச நஷ்டமாகக் கருதப்படும், அதிலிருந்து பாதிக்கப்பட்ட மரங்களை உடனடியாக விற்றால் கிடைக்கக்கூடிய தொகையைக் கழித்து வரும் மீதித் தொகையில் 80 சதவிகிதம் நஷ்ட ஈடாக வழங்கப்படும். நஷ்டஈடு கணக்கிட்டு ஒரு வாரத்திற்குள்  விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

விவசாயிகள் நஷ்டஈட்டை எப்படி பெறுவர்? பணமாகவா? வங்கிக் கணக்கிலா?
நஷ்டஈட்டுத் தொகையானது நேரடியாகவும் உடனடியாகவும் விவசயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நஷ்டஈட்டு கோரிக்கைப் படிவத்துடன் விவசாயிகளின் வங்கிக் கணக்கு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இக்காப்பீட்டுத் திட்டத்தை மற்ற வகை மரங்களுக்கும் கொண்டுவரும் எண்ணம் உள்ளதா?
ஆம். பலவகை தோட்டப்பயிர்கள், தோப்புப் பயிர்கள் மற்றும் மூலிகைப் பயிர்களுக்கு தேவையான இன்சூரன்ஸ் திட்டங்களை வடிவமைத்து வருகிறோம். விவசாயிகள் நிறைந்த நம் நாட்டில் எதிர்காலத்தில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மரக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பல லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என நம்புகிறோம்.

மழையில்லாமல் கடும் வறட்சியால் மரங்கள் பாதிக்கப்படுவதையும் இடர்பாடுகளில் சேர்க்க வேண்டும் என்பது பெரும்பான்மையான விவசாயிகளின் கோரிக்கையாகும்.

மேலும் விவரங்களுக்கு
1. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன மண்டல அலுவலகங்கள்:
1) சென்னை  044 - 28293933
2) கோவை  042 22239710
3) மதுரை  045 22342152
2. கா.த.பார்த்திபன், பேராசிரியர் – 9443505844
 

கன்னு...பார்த்து நடுங்க கண்ணு!

மரக்கன்றுகளை நடும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

ஒன்றரை அடி நீள அகலமும் ஒன்றரை அடி ஆழமும் கொண்ட குழி தோண்டிக் கொள்ள வேண்டும்.

குழியைத் தோண்டி ஒரு மாதம் காயப்போட வேண்டும். அப்போதுதான் மண்ணின் சூடு அடங்கி, கன்று வளரும் சூழல் ஏற்படும்.

குழியில் 2 கிலோ இயற்கைச் சாண எருவைக் கொட்டி அதையும் காயவிட வேண்டும்.

ஒரு மாதம் கழித்து கன்றுகளை நட வேண்டும். அப்போது வேர் மற்றும் தண்டின் இணைப்புப் பகுதி மண்ணுக்குள் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.

கன்று நடவு செய்து ஆறு மாதங்கள் வரை கண்டிப்பாக தண்ணீர் விட வேண்டும்

ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களில் மரம் நடும்போது அவை வடகிழக்குப் பருவமழையில் நன்கு வளரும்.

மண்ணை தேர்வு செய்யும் முறை :
தமிழகத்தில் பல்வேறு வகையான மண் வகைகள் காணப்படுகின்றன. காவிரி டெல்டா பகுதிகளைப் பொருத்தவரை தேக்கு மற்றும் குமிழ்தேக்கு மரங்கள் நல்ல திரட்சியாக வளருகின்றன. மணல்சாரியான பகுதிகளில் சவுக்கு, தைல மரம் போன்றவை வளரும்.அதுபோல அந்தந்தப் பகுதிகளில் உள்ள வனத்துறை அலுவலகத்தை அணுகும்போது அவர்கள் எந்த மரத்தை நடலாம் என ஆலோசனை வழங்குகின்றனர்.

மரம் வளர்ப்பு சம்பந்தமான பயிற்சிகள்
மரம் என்பது பொதுவாக இருபது,முப்பது ஆண்டுகள் கழித்து பலன் தருவது. அதனால் விவசாயிகளின் தொடர் வருமானத்திற்காக மரங்களுக்கு இடையே ஊடுபயிராக என்ன பயிர் செய்யலாம் என்பது குறித்த தகவல்கள் மற்றும் பயிற்சிகளை வனத்துறை அலுவலகங்கள் அளிக்கின்றன. அதுபோல மரம் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு, பராமரிப்பு போன்ற பயிற்சிகளும் இங்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

சு.வீரமணி



வீட்டுத் தோட்டம் அமைக்க அரசு மானியம்
காய்கறிகளை கடைக்குப் போய் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இனி இல்லை. உங்கள் வீட்டிலேயே சிறுதோட்டம் அமைக்க அரசே மானியம் தந்து, வழிகாட்டுகிறது. தமிழக அரசின் வேளாண்துறை  5 கோடி ரூபாய் செலவில்,  ‘நீங்களே செய்து பாருங்கள்’ (Do it Yourself)  என்கிற திட்டத்தை முதல் கட்டமாக சென்னை மற்றும் கோயமுத்தூரில் அறிமுகப்படுத்தியிருக்கிறது .

அதென்ன, நீங்களே செய்து பாருங்கள்?
நீங்கள் சாப்பிடும் காய்கறிகளை நீங்களே  உங்கள் வீட்டில் விளைவித்துக் கொள்ளலாம். நகரத்தின் வீடுகளில் விளைவிக்க ஏது இடம் என்று கேட்கிறீர்களா? உங்கள் வீட்டு மொட்டை மாடியே போதும். 160 சதுர அடி இருந்தால் போதும். கத்தரி, தக்காளி, வெண்டைக்காய், வெங்காயம், கீரை வகைகள் என்று  வேண்டிய காய்களை விளைவிக்கலாம். தோட்டம் அமைக்கத் தேவையான அனைத்துப் பொருட்களையும் 50% மானிய விலையில் அரசு வழங்குகிறது. இதில் விதைகள், இயற்கை உரங்கள், பாலித்தீன் பைகள், வாளிகள் என அனைத்தும் அடங்கும். இதில் 2,414 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 1,207 ரூபாய்க்கு அரசு வழங்குகிறது. தோட்டத்தை எப்படி பராமரிப்பது என்கிற ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

எங்கு அணுகுவது?
சென்னையில் உள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம்,
மாதவரம், சென்னை-51. தொலைபேசி: 044-25554443
கோவையில் உள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம்,
8 தடாகம் சாலை, கோவை - 641013
தொலைபேசி 0422-2453578

இணையத்தில்http://tnhorticulture.tn.gov.in/application-do-yourself-kit  இந்தச் சுட்டியில் சென்றும் பதிவு செய்யலாம்.

ராஜபாளையம் நாய்



ராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ? ம்ம்ம்....கரக்ட், நாய் !! சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால் அது ஆள் உயரம் இருக்கும், எழுந்து நின்றால் கன்றுக்குட்டி உயரம் இருக்கும், மோப்ப சக்தி அதிகம் என்றெல்லாம் சொல்ல கேட்டிருக்கிறேன். இந்த ஊர் ஸ்பெஷல் பகுதி ஆரம்பிக்கும்போது இப்படி எல்லாம் சென்று பார்ப்பேன் என்று எண்ணவில்லை. ஆனால் இப்படி சுற்றி அந்த ஊரின் பெருமையை பற்றி கேட்கும்போது மனதில் மகிழ்ச்சி, இங்கு ஒரு நாய் பண்ணைக்கே சென்று மிகவும் விரிவாக செய்தி சேகரித்தேன். அப்பப்பா.... தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் எவ்வளவு சிறப்பு இருக்கிறது !! வாருங்கள் பார்க்கலாம் ராஜபாளையத்தை.....

இந்த ஊரின் எல்லையை தொடும்போதே இரண்டு பக்கங்களிலும் "நாய்கள் வாங்க அணுகவும்" என்று ப்ளெக்ஸ் போர்டு ஆரம்பித்து விடுகிறது. பொதுவாக ஊரின் உள்ளே நாய் வளர்த்தால் அது கத்துவதால் புகார் வருகிறது என்று நாய் உற்பத்தி செய்பவர்கள் ஊருக்கு வெளியே இருக்கின்றனர். நாட்டு நாய்கள் எனும்போது இங்கு கன்னி, சிப்பி பாறை, கோம்பை மற்றும் ராஜபாளையம். கீழே இருக்கும் படங்களில் வெள்ளையாய் இருப்பது ராஜபாளையம் நாய், கருப்பாய் இருப்பது கன்னி, பழுப்பு நிறத்தில் இருப்பது சிப்பிபாறை வகைகள், இளம் பழுப்பு நிறத்தில் இருப்பது கோம்பை.

இராஜபாளையம் நாய்களின் பூர்வீகம் ஆந்திரம். விஜயநகரப் பேரரசின் சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்ததும், கிருஷ்ண தேவராயரிடம் படை வீரர்களாக இருந்தவர் பிழைப்பிற்காக தென் தமிழகத்திற்கு வந்தார்கள். அப்பொழுது, அவர்கள் வேட்டைக்குப் பயன்படுத்திய நாய்களையும் தங்களுடன் அழைத்து வந்தனர். மன்னர் காலத்தில் தளபதிகளும், படை வீரர்களும் தங்கும் பகுதிக்கு "பாளையம்' என்று பெயர். ராஜாக்களிடம் பணிபுரிந்தவர்கள் தங்கிய இடம் என்பதைக் குறிக்கும் வகையில் "ராஜ பாளையம்' என்று அழைக்கப்பட்டு அதுவே இப்பொழுது ராஜபாளையம் என்று அழைக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். ராஜபாளையம் வகை நாய்கள் 55 பவுண்ட் எடை இருக்கும். மிகவும் வலிமையாக உடல் அமைப்பு கொண்டது. வேகமாக ஓட கூடியது. பொதுவாக வெள்ளை நிறம் அல்லது பிங்க் நிறத்தில் இந்த நாய்கள் இருக்கும், 26 இஞ்ச் உயரம் இருக்கும்.

பெட்டை நாய்க் குட்டிகள் எட்டு இருந்தால், இரண்டு ஆண் குட்டிகள் போதும். பெட்டை நாய் எட்டு மாதத்தில் சினைக்கு தயாராகிவிடும். அதே நேரம், ஆண் நாய்களை இரண்டு ஆண்டுகள் கழித்து பெட்டையுடன் சேர்ப்பதுதான் நல்லது. ஒரு நாய் சராசரியாக ஆறு குட்டிகள் வரை போடும். எட்டு மாதத்தில் 48 குட்டிகள் கிடைக்கும். பெட்டைக் குட்டி ஒன்று மூன்றாயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகிறது. ஆண் என்றால், நான்காயிரம் ரூபாய். எட்டாயிரத்தில் இருந்து பன்னிரெண்டாயிரம் வரை இன்று செல்கிறது. அதுவே சிப்பிபாறை அல்லது கன்னி நாய் வகைகள் ஏழாயிரம் முதல் விலை போகிறது.



பொதுவாக சிப்பிபாறை, கன்னி வகை நாய்கள் எல்லாம் வேட்டைக்கு பயன்படுபவை, ராஜபாளையம் மற்றும் கோம்பை நாய்கள் எல்லாம் வீட்டு காவலுக்கு நல்லது என்கிறார்கள். இந்த நாய்களை குட்டியில் இருக்கும்போது முப்பது அல்லது நாற்பது நாளில் விற்று விட வேண்டுமாம், இல்லையென்றால் தினமும் அதற்க்கு செலவு செய்வதால் நஷ்டம்தான் என்கிறார்.

ராஜபாளையம் நாய் கன்னுகுட்டி உயரம், ஏறி நின்றால் நம்மை விட உயரம் என்பதெல்லாம் அந்த காலம், இனி எவர் சொன்னாலும் நம்ப வேண்டாம். காலத்தின் மாற்றத்தில் ராஜபாளையம் நாய்களுக்கு இன்றும் மதிப்பு உண்டு, ஆனால் அது உயரத்தில் இன்று சுருங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

Friday, 10 January 2014

What is TRP?


TRP stands for Tevevesion Rating Points. It is a tool that helps find out which television programmes are viewed the most. A device called the 'People's meter' is attached to the TV sets in a few thousand viewers houses for calculating this. These numbers are treated as the sample. The 'People's meter' actually records the time and the programme that a viewer watches on a particular day.
In India INTAM (Indian Television Audience Measurement) is the electronic rating agency which does this work. INTAM uses two methodologies for calculating TRP.
  • The first is frequency monitoring, in which 'people meters' are installed in sample homes and these electronic gadgets continuously record data about the channel watched by the family members. 'People meter' is a costly equipment, which is imported from abroad. It reads the frequencies of channels, which are later, decoded into the name of the channels and the agency prepares a national data on the basis of its sample homes readings. But there is a drawback in the technique, as cable operators frequently change the frequencies of the different channels before sending signals to the homes. It may be very misleading to read a channel according to a particular frequency even if the down linking frequency is same all over India.

  • Second technique is more reliable and relatively new to India. In picture matching technique people meter continuously records a small portion of the picture that is being watched on that particular television set. Along with this agency also records all the channels' data in the form of small picture portion. Data collected from the sample homes is later on matched with the main data bank to interpret the channel name. And this way national rating is produced.

Thursday, 9 January 2014

ஹலால் (Halal) என்றால் என்ன ??


பொது மக்கள் சிந்தனையில் மிக நீண்ட நாட்களாக ஓடி கொண்டிருக்கும் கேள்வி இது ? பெரும்பாலான அசைவ உணவகங்களில் குறிப்பிட்டிருக்கும் 100 % (ஹலால்) – நம்மவர்கள் பெரும்பாலனவர்கள் நினைப்பது சுத்தம் என்றுதான் . அதன் உண்மை விளக்கம் தான் என்ன வாருங்கள் அலசுவோம் !!!

சுருக்கமாக ஹலால் என்பது கால்நடைகளை அறுக்கும் போது அதன் கழுத்து பகுதி முழுவதும் அறுபடாமல் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுபதால் ,அதன் வலியை உணர்த்தும் நரம்புகள் துண்டிக்க பட்டு வலியை உணராமல் இருக்க செய்வதே ஹலால் ஆகும் . இப்படி அறுக்கும் போது அதன் முழு ரத்தமும் வெளிப்பட்டு ரத்தத்தின் மூலம் நோய் பரவுதல் தடுக்கபடுகிறது. இதற்கு மற்றுமொரு காரணம் இறைவன் அனுமதி படி அறுபது என்பது பொருள்

ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்:-

A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும்.

கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு – மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.

B.
மேற்படி ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு – கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும்.

இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம் ?

அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் – இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடும் துண்டிக்கப்படுவதால் – இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு – இதயம் நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள் இரத்தம் இரத்த நாளங்களில் தங்கிவிடக் கூடும்.

D. கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது இரத்தமே !

கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே. ஹலால்முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நைடகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை.

E. . ஹலால் முறையில் அறுக்கப்படும் கால்நடைகளின் இறைச்சி நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சியில் இரத்தம் கலந்து விடாமல் இருப்பதால் – வேறுவிதமாக கொல்லப்படும் கால்நடைகளின் இறைச்சியைவிட ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

F. ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நடைகள் வலியை உணர்வதில்லை.

இதன் முறையில் கால்நடைகள் அறுக்கப்படும்பொழுது – கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் – உடலில் உள்ள சதைப்பாகங்கள் – இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் – துள்ளுவதாகவும் – துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல.

இதை உண்மை படுத்தும் விதமாக ஹலால் முறையில் அறுக்க பட்ட உயிரினமும் ,வேறு விதமாக (தலை துண்டிக்கப்பட்டு ) அறுக்க பட்ட உயிரினங்களை விட ஹலால் கால்நடைகள் மிக குறைந்த (painless dead ) வலியை உணர்வதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

மேலும் தகவல்கள் இருந்தால் கருத்துக்களில் பதியவும்.

Thursday, 2 January 2014

பனியிலோ, மழையிலோ நனைந்தால் ஜலதோஷம் பிடிப்பது ஏன்?



         ச்ச்ச்சூ! தோஷங்களில் எனக்கு ஹச்ச்சூ..! பிடித்த தோஷம் சந்தோஷம். பிடிக்காத தோஷம் ஹச்ச்சூ! ஜலதோஷம், ஆனா அதுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி வந்து பிடிச்சுக்கும். எதுக்கும் இரண்டடி தள்ளி வெச்சே படிங்க. உங்களையும் கபால்னு  பிடிச்சுக்கப் போவுது.

உலகத்தில எத்தனையோ கற்பனை. எத்தனையோ கட்டுக்கதை. எத்தனையோ பீலா. எத்தனையோ கப்சா. அதில இதுவும் ஒன்று. ஆமாம் மழையிலோ, பனியிலோ நனைவதற்கும் சளி பிடிப்பதற்கும் சம்பந்தம் கிடையாது.அப்படியென்றால் ஏன் தமிழில் ஜலதோஷம் என்றும், ஆங்கிலத்தில் கோல்டு (cold), சில் (Chill) என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று கேட்காதீர்கள். என் பெயர் கூடத்தான் எழிலரசன். ஆனால் சின்னப் பிள்ளைங்க பூச்சாண்டின்னு மிரளுதுங்க. சில பேரு பக்கிரின்னு நினைச்சு, யோவ் தள்ளி நில்லுன்னு மிரட்டியிருக்காங்க. ஆட்டோக்காரரிலிருந்து அடுத்த வீட்டுக்காரர் வரை தாடின்னுதான் கூப்பிடறாங்க. பேரில என்னங்க இருக்கு.

அப்படியானா ஏன் மழைக்காலத்தில/ பனிக்காலத்தில அதிகம் பேருக்கு ஜலதோஷம் பிடிக்கிறது என்று கேட்கிறீர்களா? இப்பக் கேட்டீங்களே அது நியாயமான கேள்வி.

நமக்கு ஜலதோஷம் பிடிக்கக் காரணம் ரைனோ வைரஸ் என்ற ஓர் நுண்ணுயிர். வைரஸ், பாக்டீரியா இரண்டும் நுண்ணுயிர்கள்தான். இதில் பாக்டீரியா என்பது செத்தது, உயிருள்ளது இரண்டிலும் வளரும். இறந்த உடல் அழுகுவதற்கும் பாக்டீரியாதான் காரணம். நம் வயிற்றுக்குள் முகாமிட்டு சில வைட்டமின்களைத் தயாரிப்பதும் பாக்டீரியாதான். ஆனால் வைரஸ் உயிருள்ளவற்றின் மீதுதான் வளரும்.செத்ததைச் சீந்தாது.

சளி பிடிக்கக் காரணமான ரைனோ வைரஸ் மழை, பனிக்காலங்களில் காற்றில் அதிகம் இருக்கும். எங்கேயாவது பனிக்கு இதமாக கதகதவென்று வீடு கிடைத்தால் குடியேறி டேரா போடலாம் என்று கூட்டம் கூட்டமாய் அலைந்து கொண்டிருக்கின்றன. நாம்தான் மூக்கைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறோமே.

நம் சுவாசப் பாதையின் மேல் பகுதியின் (அதாங்க மூக்கு, சைனஸ், நுரையீரலுக்குச் செல்லும் குழாயின் மேற்புறம்)  உள்சுவரில் போய் குடியேறும். ஏனெனில் அந்தப் பகுதி மென்மையாகவும் மூச்சுக் காற்றின் போக்குவரத்து காரணமாக இளஞ்சூடாகவும் இருக்கும்.

திடுதிடுனு வந்து திண்ணையில் உட்கார்ந்து விட்ட அழையா விருந்தாளிகள் வீட்டுக்குள் புகுந்து விடாமல் அதாவது நுரையீரலுக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக நம் உடல் எதிர்ப்பு சக்தியை இறக்கி விடுகிறது. ரைனோ வைரஸ் காற்றில் திரியும் சஞ்சாரி. சுவாசத்தைப் பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்துவிடக் கூடும் என்பதால் அதை நகரவிடாமல் முடக்குவதற்காக கொழகொழவென்று ஒரு திரவத்தை மூக்கு சுரக்கிறது. சேற்றில் மாட்டிக்கொண்ட மனுஷங்க போல வைரஸ் நகர முடியாமல் திணறுகிறது.

அதைத் திணற அடிப்பது மட்டுமா நோக்கம்? வெளியே துரத்துவது அல்லவா நோக்கம்? ஹச்ச்ச்சூ! நீங்கள் தும்மல் போடுகிறீர்கள். விருந்தினர்களில் சிலர் வெளியே துரத்தப்படுகிறார்கள். அப்புறம் பல முயற்சிகள். சிந்திச் சிந்தி உங்கள் கைக்குட்டை ஈரமாகிறது.

மழைக் காலத்தில் அதிகம் பேருக்கு ஜலதோஷம் பிடிப்பதற்குக் காரணம், மற்ற நாள்களைப் போல நாம் திறந்த வெளிகளில் அதிகம் திரியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதுதான். ஏனெனில் அதைப் போன்ற சூழ்நிலையில் நாம் போடும் தும்மலில் வெளியேறும் வைரஸ்கள் அறைக்குள்ளே  சுற்றிவரும்.

ஜலதோஷம் என்பது ஒரு தொற்றுதான். ஆனால் வியாதி அல்ல. அது நம் தற்காப்பிற்காக நமது உடல் மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கை. ஆனால் வேடிக்கை என்னவென்றால் நாம் அதை இம்சை என நினைக்கிறோம்!.

இந்த இம்சையை வெல்ல என்னென்னெவோ செய்கிறோம். மாத்திரைகளை அள்ளி விழுங்குகிறோம். அவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆனால் ரைனோவைத் துரத்தாது, கட்டுப்படுத்தாது. ஆன்டிபயாடிக்கள் பயன் தராது. ஆவி பிடிப்பதால் பிரயோஜனம் இல்லை. வெந்நீர் குடிப்பதால் விடுதலை கிடைக்காது. சூப்-அதிலும் சிக்கன் சூப்-கொஞ்சம் கட்டுப்படுத்தும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

இந்த இம்சையோடு நாம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இங்குதான் இயற்கை ஓர் ஆச்சரியம் நிகழ்த்துகிறது. ஆம், நம்மைத் தாக்கும் ரைனோ வைரஸுக்கு ஆயுசு ரொம்பக் கம்மி. இரண்டு நாட்கள் அதிகபட்சம் நாலு நாட்கள். அதனால் மேடி புயல் போல் மிரட்டிக்கொண்டு வந்தாலும் நாலு நாட்களில் அவை வலுவிழந்துவிடும்.

இனி ஜலதோஷம் பிடித்தால், அலட்டிக் கொள்ளாமல், இதுவும் கடந்து போகும் என்று சூப் குடித்துக்கொண்டு சுகமாக தூக்கம் போடுங்கள். உங்களை அறியாமலே சூப்பர் என்று சொல்வீர்கள். ஹச்ச்சூ!

பலன் யாருக்கு?


முதல் நாளே அதற்கான அறிகுறிகள் தோன்றத் துவங்கிவிட்டன. திமுக பொதுக்குழு கூடுவதற்கு முன் தினம், டிசம்பர் 14-ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடந்த, ‘நெஞ்சுக்கு நீதி’ நூல் வெளியீட்டு விழாவில்,  ‘யாரோடு சேருவோம் என்பதையும் யாரோடு சேரமாட்டோம் என்பதையும் எங்களுடைய கடந்தகால வரலாற்றை நியாயமாக, நேர்மையாக சிந்தித்துப் பார்த்து அந்த முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்ன கருணாநிதி, அதற்கு முன், கடந்த காலத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட தருணங்களை நினைவு கூர்ந்து, இந்திரா காந்தியின் கடற்கரைக் கூட்டப் பேச்சையும் குறிப்பிட்டார். அப்போதே மறுநாள் எடுக்கப்போகும் முடிவு எத்தகையதாக இருக்கும் என்பதை ஊகிக்க முடிந்தது.

அடுத்த நாள் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. முன்னாள் அமைச்சர் பழனி மாணிக்கம், கே.என்.நேரு உள்ளிட்ட அநேகமாக எல்லாப் பேச்சாளர்களும் ‘நமக்கு துரோகம் செய்த காங்கிரசை விட்டு விலக வேண்டும்’ என்றே பேசினார்கள் எனத் தெரிகிறது. முன்னாள் எம்.பி.திருச்சி சிவாவின் விமர்சனம் கடுமையாக இருந்தது. ‘2ஜி அலைக்கற்றைப் புகாரில் ஆ.ராசாவின் வாக்குமூலம் பதிவு செய்வதைக் கூட காங்கிரஸ் அனுமதிக்கவில்லை’ என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய சிவா, ‘காங்கிரசுடன் வைத்துக் கொண்ட கூட்டிற்கு கட்சி கொடுத்த விலை அதிகம்’ எனக் கொந்தளித்தார்.

காங்கிரசை விமர்சித்துப் பேசினாலும் பாஜகவுடன் கூட்டு சேர்வதையும் தவிர்க்க வேண்டும் என்பதே பரவலாக நிலவிய கருத்து. துறைமுகம் காஜா, ‘காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுமே நச்சுப் பாம்புகள்’ என்று இரண்டையும் கடுமையாக விமர்சித்தார். ஆனால் ஸ்டாலின் ஆதரவாளரும்,  சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன்,‘பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்வதைப் பற்றி பரிசீலிக்கலாம்’ என்கிற ரீதியில் பேசினார். ஆனால் கருணாநிதி அதை ரசிக்கவில்லை. கூட்டத்தின் இறுதியில் இதற்கு பதிலளிப்பது போல்,  ‘சமீபகாலமாக பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து நரேந்திர மோடி குறித்துப் பேசுகிறீர்கள். ஆனால் எனக்கோ, பேராசிரியருக்கோ, ஸ்டாலினுக்கோ அந்தச் சலனம் ஏற்படவில்லை. பாரதிய ஜனதா நம்முடன் கூட்டணி வைக்காத கட்சி இல்லை. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோர் கண்ணியமான தலைவர்கள். இவர்கள் இருவரும் எந்தக் கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றிக் கொடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களை மதிப்புமிக்க தலைவர்களாகவே கருதுகிறோம். ஆனால் அப்போது இருந்த பாரதிய ஜனதா வேறு. இப்போதுள்ள பாரதிய ஜனதா வேறு. கூட்டணி குறித்துப் பேசும்போது அந்தக் கட்சியின் தலைமை யார் என்பதைப் பார்க்க வேண்டும். அதிலிருந்து வித்தியாசங்களை உணர முடியும்"  என்று கருணாநிதி பேசினார்.

இரண்டு தேசியக் கட்சிகளையும் உதறிவிட்டு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம் என திமுக கருதுவதற்குக் காரணம் என்ன?

1. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் காங்கிரஸ் பலவீனமடைந்து  வருகிறது என அது கருதுகிறது. அண்மையில் நடந்த நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகளை சில தலைவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

2. மீனவர் பிரச்சினை, இலங்கைப் பிரச்சினை போன்றவற்றால் தமிழ்நாட்டில் காங்கிரசின் செல்வாக்கு சரிந்துள்ளது என்பது அதன் கணிப்பு. காங்கிரசோடு கூட்டணி சேர்ந்தால் கணிசமான இடங்களை அதற்கு ஒதுக்க நேரிடும். ஆனால் காங்கிரசால் அவற்றை வெல்ல முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி. 2006 சட்டமன்றத் தேர்தலில் 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூடுதலாக இடம் கேட்டது. திமுக அதற்கு இணங்காததால் இரண்டு கட்சிகளுக்குமிடையே உரசல் ஏற்பட்டது. அதனையடுத்து 2011-ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதாக திமுக அறிவித்தது. பின் இரண்டு தரப்பிற்குமிடையே சமாதானம் ஏற்பட்டு, காங்கிரசிற்கு 63 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இப்படி கையை முறுக்கி அதிக இடங்களைப் பெற்ற காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்றது. தன்னுடைய இடங்களை வெல்ல முடியாதவர்களுக்கு விட்டுக் கொடுப்பது தேர்தலுக்கு முன்பே தோற்பதற்கு இணையானது என்ற ஒரு கருத்து நிலவுகிறது

3. காங்கிரசின் செல்வாக்கு சரிந்து வருகிறது என்ற போதிலும் அது தமிழகத்தில் பாஜகவிற்கு சாதகமாக மாறவில்லை. மோடி அலை என்ற ஒன்று இருக்கிறதா என்கிற சந்தேகம்  சிலருக்கு இருக்கிறது. அதனால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதால் அதன் பலன் பாஜகவிற்குக் கிடைக்குமேயன்றி திமுக, அதன் சில வாக்கு வங்கிகளைப் பறி கொடுக்க நேரிடலாம்.

4. ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதின. எல்லாக் கட்சிகளின் ஆதரவையும் திமுக கோரியது. ஆனால் காங்கிரஸ் அதற்கு பதிலே சொல்லவில்லை. பாமக, இடதுசாரிகள், பாஜக ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற போதிலும் பதிவான வாக்குகளில் 30 சதவீதம் அளவிற்கு திமுக வாக்கு பெற்றிருக்கிறது. எனவே மற்ற கட்சிகளின் ஆதரவில்லை என்றாலும் திமுக வலுவாகவே இருக்கிறது

5. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தேசியக் கட்சிகளுக்கும் ஆட்சி அமைக்கப் போதிய இடங்கள் கிடைக்காது. அதே நேரம் மாநிலக் கட்சிகளின் கையே ஓங்கி நிற்கும் எனப் பலரும் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்கள். அதனால் யாருடன் சேர்ந்து கொள்ளலாம் என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வதே புத்திசாலித்தனமானது.

சரி, திமுக போடும் கணக்கு என்ன?

இந்தத் தேர்தலில், ஏன் எந்தத் தேர்தலிலும் உண்மையான போட்டி என்பது திமுக - அதிமுக இடையில்தான். ஏனெனில் மற்ற கட்சிகள் எந்த அணியில் இருந்தாலும் அவற்றின் வாக்கு விகிதங்களில் பெரிய அளவு மாற்றம் ஏற்பட்டு விடுவதில்லை. உதாரணமாக 2006 சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிமுக அணியில் இருந்தது. அப்போது அது பெற்ற வாக்குகள் 1.3%. 2011 சட்டமன்றத் தேர்தலில் அது திமுக அணிக்கு வந்தது. அப்போது அது பெற்ற வாக்குகள் 1.5%.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டபோது பாமக பெற்ற வாக்குகள் 6.4%.  2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டபோது பாமக பெற்ற வாக்குகள் 5.2%. இடதுசாரிகள் எந்த அணியில் இருந்தாலும் 2 சதவீத அளவிற்கு வாக்கு பெறுகிறார்கள்.

எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் பாஜக கடந்த 10 ஆண்டுகளாக 2 சதவீத அளவில் வாக்குகள் பெற்று வருகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் இந்தக் கட்சிகள் இடம் பெயர்வதால் இந்த இரண்டு பெரிய கட்சிகள் பெரிதாக லாபமோ, நஷ்டமோ அடைவதில்லை. ஆங்கிலத்தில் சொன்னால், synergy effect  என்பது ஏற்படுவது இல்லை.

கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால் திமுகவிற்குப் பெரிதாக வாக்கு சதவீதம் கூடுவதில்லை. மாறாக குறைந்து வருகிறது. கடந்த மூன்று தேர்தல்களாக திமுக 22 முதல் 26 சதவீதம் வாக்குகள் பெற்று வருகிறது (2006-இல் 26.5%, 2009-இல் 25.1%, 2011-இல் 22.4%).

திமுக, அதிமுக என்கிற இரண்டு கட்சிகள் பெறும் வாக்கு வித்தியாசங்கள் இடையில் ஏற்படும் 5 முதல் 7 சதவீத மாற்றம் முடிவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. உதாரணமாக 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வாக்குகளின்  சதவீதம் 25.1%, அதிமுக பெற்ற வாக்குகளின் சதவீதம் 22.9%. ஆனால் திமுக பெற்ற இடங்கள் 18, அதிமுக பெற்ற இடங்கள் 9.

இந்த 5 முதல் 7 சதவீத  வாக்குகளைக் கைப்பற்றத்தான் திமுக திட்டமிடுகிறது. அது சாத்தியமா?

கடந்த தேர்தல்களில் காங்கிரசிற்கு எதிரான வாக்குகள் அதிமுகவிற்கோ அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ சென்றன. இந்த முறை காங்கிரசிற்கு எதிரான வாக்குகள் ஒட்டுமொத்தமாக அதிமுகவிற்குச் சென்றுவிடாதிருக்க வேண்டுமானால் காங்கிரசிற்கு எதிராகக் களம் கண்டாக வேண்டும்.

பாஜகவிற்கு எதிரான வாக்குகள் பற்றி கவலை இல்லை. ஏனெனில் சிறுபான்மை மக்கள் வாக்குகள், தலித் மக்கள் ஆதரவு இரண்டும் திமுகவிற்கு நெடுங்காலமாய்க் கிடைத்து வந்திருக்கின்றன. மதிமுக பாஜகவோடு சேருமானால், காங்கிரஸ் - பாஜக இரண்டிற்கும் எதிரான தமிழ் தேசியவாதிகளின் வாக்குகளைக் கூடக் கேட்டுப் பெறலாம்.

இவை எல்லாம் சேர்ந்து வாக்கு வீதத்தில் 3 முதல் 5 சதவீத மாற்றங்களை ஏற்படுத்துமானால் கணிசமான இடங்களைப் பெறலாம். 

தடைகள் என்ன?

அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து எல்லாத் தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள்- பெரும் வெற்றி கண்டு வருகிறது. இதற்கு மக்கள் ஆதரவு மட்டுமின்றி களப்பணியிலும் அது வலுவாக இருப்பது ஒரு காரணம்.

தமிழகத்தின் உரிமைகளுக்காக அது தொடர்ந்து வாதிட்டு வந்திருக்கிறது. ஆனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 9 ஆண்டு காலம் பங்கு வகித்திருக்கிறது. இதைச் சுட்டிக் காட்டி காங்கிரசிற்கு எதிரான வாக்குகளைத் தன் பக்கம் திருப்ப அது முயற்சிக்கும்.

இப்போது அரசியல் வட்டாரங்களில் உலவுகிற தகவல்களின்படி, குறைந்தது நான்குமுனைப் போட்டி நிலவும். அந்த நிலையில் காங்கிரஸ், பாஜகவிற்கு எதிரான ஓட்டுக்கள் பிரியும்.

கணக்குகள் புதிராகின்றன. ஆனால் சுவாரஸ்யமான புதிர்.


கலைஞரும் தமிழகமும்!

மிழகத்தின் அரசியல், பொருளாதாரம், வரலாறு, வளர்ச்சி, சமூகவியல் என எதை பற்றி யார் எழுதினாலும் அதில் தவிர்க்கமுடியாத ஒரு பெயர் கருணாநிதி. எல்லோராலும் கலைஞர் என அழைக்கப்படும் அந்த மனிதன், தமிழகத்தை சத்தமின்றி புரட்டி போட்ட விதம் மாற்றுக்கட்சியினரையும் கூட வியக்கவைக்கும் ஒன்று.


இந்தியா மிக மிக இளமையான நாடு. சுதந்திரம் பெற்று வெறும் 60 ஆண்டுகள் மட்டுமே ஆன இளைய பாரதம். சுய ஆட்சியின் தாத்பரியங்களை அறிந்து செயல்படுத்தி வளர்ச்சியை நோக்கி அடி எடுத்து வைக்கவே இந்தியாவின் பல பல மாநிலங்கள் திக்கி திணறிக்கொண்டிருக்கும் வேளையில் மிக சில மாநிலங்கள் மட்டும் மிக வேகமான முன்னேற்றங்களை அடைந்தது. அவற்றில் மிக முக்கியமான இடம் தமிழகத்துக்கு உண்டு. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சமூகவியல் என பலவற்றிலும் தமிழகம் முன்னோடியாய் திகழ்வதற்கு, முற்போக்கு சிந்தனையுள்ள பல பல தலைவர்கள் இங்கே தோன்றி, மக்களை பற்றி அக்கறை கொண்டு அவர்களுக்காக உழைத்தது ஒரு காரணம். அப்படிப்பட்ட தலைவர்களுள், யாராலும் எண்ணிப்பார்க்கமுடியாத வளர்ச்சியை மிக குறுகிய காலங்களுள் தமிழகத்துக்கு தந்தவர்கள் இரண்டே இரண்டு பேர் மட்டும் தான். ஒருவர் மக்கள்திலகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், மற்றொருவர் இன்றைக்கு பிறந்தநாள் காணும் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

பெரியார் நீதிகட்சி தலைமை ஏற்று அதனை திராவிடர்கழகமாக மாற்றுகையில் என்ன கொடி வைக்கலாம் என சிந்திக்கிறார். ஒரு குழுவே தீவிரமாக ஆராய்கிறது. அப்போது கழகத்திலிருந்த கலைஞர் அவர்கள் தன் கட்டைவிரலை கீறி அந்த ரத்தத்தை கறுப்பு துணியின் மையத்தில் வட்டமாய் தீட்டி ‘இருண்ட தமிழகத்தின் மேன்மைக்காக ரத்தம் கொடுப்போம்’ என வரைந்த அந்த கொடி தான் இன்றுவரை திராவிடர் கழக கொடியாக திகழ்கிறது. அப்போது ஆரம்பித்தது அவரது அரசியல் பயணம்.

திரைப்பட வசனம், திரைக்கதை, பாடல்கள், நூல்கள், பேச்சாற்றல், சிந்தனை திறன் என வெல்லாம் அறியப்பட்டிருந்த கலைஞர் அரசியல்வாதியாகவும், சிறந்த பொருளாதார நிபுணராகவும், நிர்வாகியாகவும் செயல்பட்டார். அவரது திரைத்துறை பற்றி இப்போது எதுவும் விவாதிக்காமல் அவர் தமிழகத்துக்கு எந்த வகையில் உபயோகமாக இருந்தார் என்பதை பற்றி மட்டும் பதியமிட விரும்புகிறேன்.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் திமுகவை தோற்றுவித்தபோதே முதல் நாளிலிருந்தே முதல் நிலை தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் கலைஞர். திராவிடர் கழகம் போலவே வெறும் சமூக இயக்கமாக மட்டுமே இயங்கவேண்டும் என கருதிய அண்ணாவிடன் விவாதம் செய்து, திமுகவை அரசியல் இயக்கமாக மாற்றியதிலும், அண்ணாவே எதிர்பாராதவிதத்தில் தேர்தலில் வெற்றி தேடி தந்து அண்ணாவை அரியணையில் அமர்த்தியதிலும் கலைஞரின் பங்கு மகத்தானது.

1969-ல் முதலமைச்சர் ஆகும் வரை பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதியின் முக்கிய குறிக்கோளே, தமிழகம் போக்குவரத்தில் சிறப்பான இடத்தை பிடிக்கவேண்டும் என்பதாக இருந்தது. சாலைகள், பாலங்கள் என பல கட்டுமானங்களை தமிழகம் முழுவதும் அமைத்தார். இன்றைக்கும் இந்தியாவின் சிறந்த போக்குவரத்து வலைப்பின்னல் தமிழகத்தில் மட்டும் தான் இருக்கிறது என்கிற பெருமைக்கு அவர் மட்டுமே காரணம். எந்த ஊரிலுள்ள எந்த பாலத்தை பார்த்தாலும், எந்த ஒரு விஷயம் மக்களுக்கு நன்மை தருவதாக நீங்கள் உணர்ந்தாலும் அது அவரது முயற்சியாகவே இருக்கும். கோவை உப்பிலிபாளையம் பாலம், சென்னை அண்ணா மேம்பாலம், சென்னையில் 17 சிறு பாலங்கள், திருச்சி காவிரி பாலம், மதுரை வைகையின் மீதான 6 பாலங்கள், நெல்லை ஈரடுக்கு பாலம் என பிரம்மாண்டமான அனைத்து பாலங்கள், சாலைகள் அவரது முயற்சி. அதே போல மாநிலம் முழுவதுமான சிறு அணைகளும், தஞ்சை தரணியின் சிற்றாறுகள் பராமரிப்பும் அவரது முயற்சி.

இவை போன்ற அரசு ரீதியான திட்டங்கள் எல்லா மாநிலங்களிலும் நடைபெறுவது தான். ஆனால் இந்தியா முழுமையும் கலைஞர் மீது மரியாதை கொள்வதற்கான காரணமே, இந்த மாநில மக்களின் அடிப்படை வசதிகள் பற்றி, அவர்களது சிரமங்களை பற்றி கவலை பட்டு அவர்களுக்காக அவர் தீட்டிய சமூக திட்டங்கள் தான். அவை பற்றி சொல்வதானால் வலைப்பூ போதாது, எனினும் முக்கியமான திட்டங்களுள் மிக சில திட்டங்களை மட்டும் பட்டியலிட்டாலே, மக்கள் மீதும், மக்களின் சுய மரியாதை மீதும் அவர் கொண்ட அக்கறை லேசாக விளங்கும்.

1. மனிதனை மனிதனே இழுக்கும் கைவண்டியை ஒழித்து ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை உண்டு என உணர்த்திய இலவச சைக்கிள் ரிக்ஷா திட்டம்.

2. கார்விபத்தில் கண்ணில் அடிபட்டு சிகிச்சையிலிருக்கையில் டாக்டர்.அகர்வால் மூலமாக கேடராக்ட் பற்றியும், அப்படி ஒரு நோயே இருப்பதை அறியாமலிருக்கும் தமிழக மக்களை பற்றியும் அறிந்து, கொண்டு வந்த ‘இலவச கண் சிகிச்சை திட்டம்’. இதன் மூலம் ஒவ்வொரு கிராமத்துக்கும் மருத்துவ குழு சென்று அனைவருக்கும் கட்டாயமாக கண் பரிசோதனையும் இலவச அறுவை சிகிச்சையும் செய்து கண்ணொளி வழங்கிய திட்டம்.

3. திருமண செலவுக்கு வழியில்லாத விரக்தியில் தற்கொலை சென்ற பெண் பற்றிய செய்தியை படித்து, இனி யாரும் இப்படியொரு நிலைக்கு தள்ளப்படக்கூடாது என கொண்டு வந்த ‘மூவலூர் ராமாமிர்தம் இலவச திருமண உதவி திட்டம்’

4. குடிசையுள் உழன்ற ஏழை மக்களுக்காக, அவர்களும் நாகரீக வாழ்க்கை வாழவேண்டும் என நகரங்களில் கொண்டு வந்த குடிசைமாற்று வாரிய திட்டம்.

5. 24 மணிநேரமும் உழைக்கும் காவலர்களுக்காக காவலர் வீட்டு வசதி திட்டம்

6. தனியாரின் ஏகபோகமாக இருந்து, நகரங்களை மட்டுமே இணைத்த பேருந்துகளை தேசிய உடமையாக்கி எல்லா குக்கிராமங்களுக்கும் பேருந்து இணைப்பு கொடுத்த போக்குவரத்து கழக சட்டம்

7. காதல் மணம் என்பது சட்டப்படி குற்றமாக கருதிய கால கட்டத்தில், காதல் திருமணங்களையும், கலப்பு திருமணங்களையும் சட்டப்படி அங்கீகரித்த முதல் மாநிலம் தமிழகம். இன்றைக்கு காதலிக்கும், இதுவரை காதல் மணமோ / கலப்பு மணமோ செய்த ஒவ்வொருவரும் நன்றிகாட்டும் கலப்புமண சட்டம்.

8. கடவுள் முன்பு அனைவரும் சமம் எனும் படிக்காக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என கொண்டுவந்த சட்டம்

9. கடவுள் மறுப்பு இயக்கத்தில் இருந்து வந்தாலும், தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிடினும், கடவுள் மீதான நம்பிக்கை கொண்டோரின் உரிமைகளை பாதுகாக்கவேண்டும் என்பதற்காக கொண்டு வந்த இந்து சமய அறநிலைய துறை சட்டம். கிறித்துவ, இசுலாமிய வழிபாட்டிடங்களுக்கெல்லாம் ஏதேனும் ஒரு அமைப்பு பொறுப்பாக இருக்கையில், சிதறிக்கிடந்த இந்து ஆலையங்களை எல்லாம் இந்த துறையின் கீழ் கொண்டுவந்து, தினசரி ஒரு வேளையாவது பூஜை தவறாமல் நடைபெறவேண்டும் என அரசின் சார்பில் நிதியுதவி செய்து, கோவில்களை புனரமைத்த திட்டம்.

10. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் வாழ்வில் ஏற்றம் பெறவேண்டும் என்பதற்காக இடஒதுக்கீட்டு முறையை சீர்திருத்தி பரவலாக்கி விரிவாக்கிய பாங்கு என மிக மிக நீண்ட பட்டியல் அது.

எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்குமான மிக முக்கிய வித்தியாசமே, மக்களை நேரடியாக சென்று சேர்கின்ற திட்டங்களை எம்.ஜி.ஆர் கொண்டுவந்தார் எனில், மறைமுகமாக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான நீண்ட கால திட்டங்களை கலைஞர் கொண்டு வந்தார் என்பது மட்டும் தான். தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எம்.ஜி.ஆர், கலைஞர் ஆகிய இருவராலும் நன்மைகளை பெறாமல் இருந்ததில்லை. ஏதேனும் ஒரு வகையில் நாம் அனைவருமே, ஒவ்வொருவருமே இவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்க கடமைப்பட்டவர்கள் தாம்!

தனது கட்சியை ஒரு குடும்பத்தை வைத்து மட்டுமே நடத்திவரும் இந்தியாவில், தனது கட்சியையே ஒரு குடும்பமாக பாவித்து நடத்திவரும் தலைவர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். இது குறித்த பதிவு தனியாக இங்கே காணலாம், விருப்பமுள்ளவர்களுக்காக!

மாற்று கட்சியினரிடம் அவர் காட்டிய மரியாதையும், நாகரீகமும் தனி பத்தியாக சொல்லப்படவேண்டிய முக்கியமான விஷயம் எனினும், ஒன்றே ஒன்றை மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மறைந்த போது, அவரை சாதாரணமாக தான் அடக்கம் செய்ய முடிவெடுத்திருந்ததாம் அப்போதைய காங்கிரஸ். விவரம் அறிந்த கலைஞர், இரவோடிரவாக அப்போதைய ஆளுநரிடம் வாதிட்டு, கிண்டி பூங்காவில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, பொதுப்பணித்துறை ஊழியர்களை கொண்டு, தனது கார் லைட் வெளிச்சத்தில் அந்த இடத்தை சுத்தப்படுத்தி, மறுநாள் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தாராம். அதோடு நில்லாமல் பின்னர் அந்த இடத்தில் அவருக்கு ஒரு நினைவிடத்தையும் கட்டி, அதன் மீது ராட்டை சின்னத்தை வைக்கவேண்டும் என அவர் தான் வரந்துகொடுத்தாராம்.

இதுபோலவே, ராஜாஜி, பக்தவத்சலம், ஜீவானந்தம் என மாற்று கட்சியினருக்கு அவர் செய்த மரியாதை ஏராளம்.

சொந்த கட்சிக்காரர் இறந்தாலே இரங்கல் தெரிவிக்காத தமிழக அரசியலில் மாற்று கட்சி தலைவர் இறந்தாலும் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யும் நாகரீக வழக்கத்தை திமுக மட்டுமே கைகொண்டு வருகிறது இன்னமும்.

கலைஞர் செய்த பல நல்ல செய்ல்களும், திட்டங்களும், உரிய முறையில் அங்கீகரிக்கப்படாமலேயே இருந்துவிட்டது. அது சரியான முறையில் புரிந்துகொள்ளப்படவுமில்லை, அவர் அதனை விளம்பரப்படுத்திக்கொள்ளவும் இல்லை. அவர் அளவுக்கு விமரிசிக்கப்பட்டவர் வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை. விமரிசனத்தை மிக கடுமையாக கையாளும் கட்சி தலைவர்களுக்கிடையில், விமரிசனத்த்தை விமரிசனமாக மட்டுமே பார்த்தவர் அவர். மேலும் அப்படியான விமரிசனத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து இருப்பின் அதனையும் பகிரங்கமாக தெரிவித்து ஏற்றுக்கொண்ட நிகழ்வுகள் ஏராளம்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறியாமல் செய்துவிட்டார்கள் என விவிலியத்தில் சொல்லப்படுவதை போல, தன்னை விமரிசிப்பவர்கள் அனைவரும் விவரமில்லாமல் தான் விமரிசிக்கிறார்கள் என்பதை உணர்ந்தவர் அவர். தன்னை விமரிசித்தவர்களுக்காகவும், அவர்களது வாழ்க்கைக்காகவும் சேர்த்தே போராடுவதில் நிகரற்றவர்.

அவரது போர்க்குணம் மிக பிரசித்திபெற்றது.

உழவேர் வாரம், மாட்டேர் வாரம் போராட்டத்துக்காக குளித்தலையில் தொடங்கிய அவரது போராட்ட வாழ்வு பல பல போராட்டங்களை சந்தித்தது. அவர் எந்த சூழலிலும், தன்னுடைய உரிமையை விட்டுக்கொடுத்து தலை தாழ்ந்து நின்றதேயில்லை.

இந்தியா முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, அனைத்து மாநிலங்களும் இந்திராவை எதிர்க்க முடியாமல் அடிபணிந்து நின்றபோது, அவசரநிலையில் நிழல் கூட தமிழக மக்களின் மீது படராமல் பார்த்துக்கொண்டவர் அவர். இந்திராவை எதிர்த்த முதல் தலைவர் அவர் தான் அப்போது. கடைசியில் அவரது ஆட்சியை கலைத்து தான் அவசரநிலையின் கொடுமைகளை தமிழக மக்கள் மீது ஏவ முடிந்தது இந்திராவால். (பின்னர், நட்பெனினும், எதிர்ப்பெனினும் தன் நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருக்கும் ஒரே தலைவர் என இந்திராவே அவரது எதிர்ப்பை பாராட்டியது தனி கதை!)

தேச நலனில் அக்கறைகொண்ட மிக சில இந்திய தலைவர்களுள் கலைஞரும் ஒருவர். இந்திரா, ராஜாஜி, சி.எஸ், மொரார்ஜி தேசாய், ஜெ.பி, பர்னாலா, குண்டுராவ், பட்நாயக், பாதல் என பல பல தலைவர்கள் மிக முக்கிய நெருக்கடியான காலகட்டங்களில் இவரது ஆலோசனையை நாடி வரும் அளவுக்கு தேச நலன் குறித்து மட்டுமே அக்கறை கொண்டு நிலைப்பாடெடுப்பவர் அவர். இப்போதும் கூட, காங்கிரஸ் தவிர வேறு நல்ல உறுதியான கட்சியோ, தலைவரோ இல்லாததால், கசப்புடன் காங்கிரசை ஆதரிக்கவேண்டி இருப்பதாக சொல்லி இருக்கிறார். ஒருவேளை ஆட்சி கவிழ்ந்தால், தற்போதைய இந்திய பொருளாதார நிலையில், ஒரு நிலையற்ற ஆட்சி அமையுமானால், இந்தியா அதோடு முடிந்துவிடும் என்பதை நன்கு உணர்ந்தவர்களுள் அவரும் ஒருவர்.

பா.ஜ.கவுடன் அணிசேர்ந்தபோது அவரை நோக்கி வந்த பல பல விமரிசன கணைகளுள் ஒன்று, பா.ஜ..க போன்ற மதவாத சக்திகளுக்கு இவர் ஊக்கம் கொடுப்பதா என்பது. அப்போது ஒரு மேடையில் அழகாக சொன்னார்கள், திமுக பாஜகவுடன் அணிசேர்வதால் திமுக நிச்சயமாக மதவாத கட்சி ஆகாது. மாறாக மதவாத செயல்களையோ, மக்கள் விரோத செயல்களையோ பாஜக செய்யாமல் திமுக பார்த்துக்கொள்ளும் என்று. அது தான் நடந்தது.

கலை, இலக்கியம், சமூகம், பத்திரிக்கை, அரசியல், சமுதாயம், சமூகம், வரலாறு, பொருளாதாரம், தொழில்வளர்ச்சி என எதை பற்றி எழுதுவதானாலும் கலைஞரை தவிர்த்துவிட்டு எழுத முடியாத அளவுக்கு தமிழகத்துடன் ஒன்றிணைந்து விட்டவர் அவர்.

இன்றைக்கு பிறந்த நாள் காணும் அவரை வாழ்த்துவதற்கு மனம் வரவில்லை எனக்கு. அதற்கான தகுதியும் இல்லை எனக்கு.

எனது கவலையெல்லாம், கலைஞருக்கு பின் தமிழகம் என்னவாகுமோ என்பது தான்! திமுக உடைவதை பற்றி திமுகவினர் தான் கவலைகொள்ளவேண்டும். அது எனது பணியல்ல! ஆனால், தமிழகம் சிதறுவதை பற்றி நான் கவலைகொள்வதில் அர்த்தமுள்ளதாக உணர்கிறேன்!

இன்றைக்கும் தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒருவராக கலைஞர் மட்டுமே இருக்கிறார். தன்னை புறக்கணித்த மக்களுக்காக எதற்காக போராடவேண்டும் என மக்களின் துன்பபொழுதுகளிலும் வாளாவிருக்கும் கட்சிகளுக்கு மத்தியில்; தன்னை முன்பு புறக்கணித்த காரணத்துக்காகவே பின்னர் தன்னை ஆதரித்தாலும் மக்களை தண்டித்து மகிழும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில், தன்னை புறக்கணித்தாலும் அந்த மக்கள் துன்பத்துக்குள்ளாகும்போது அவர்களுக்காக வீதியிலிறங்கி போராடும் ஒரு தலைவராக இப்போது அவர் மட்டுமே இருக்கிறார்!

அவர் நீண்ட நாட்கள் நலமுடன் வாழ்ந்து நம்மையெல்லாம் பாதுகாக்கவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்பாமலில்லை! அது அப்படியே நடப்பதாக!